பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வப் பரணி 39. தரைமகள்தன் கொழுநன்றன் உடலந் தன்னைத் தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணுட்(டு) அமைகளிர் அவ்வுயிரைப் புணர முன்னம் ஆவிஒக்க விடுவானேக் காண்மின் காண்மின்." |தரைமகள்.மண்மகள்; உடலால்தாங்கி-அணைத்து: அரமகள்-தெய்வப்பெண்; ஆவி-உயிர், ஒக்க.ஒருசேர! என்று காட்டுகின்ருர் தன்னுடைய கணவன் மண் மீது கிடப்பதால் அவ்வுடலே மண் மகள் தழுவுவதையும், அவனுடைய உயிர்பிரிந்து .ெ ச ன் ரு ல் அதனே விண்ணுட்டு தேவமகளிர் புணரக்கூடும் என்பதையும் நினைந்து கற்புடைமகளிர் தம் கணவன் உடலைத் தன்மடி மீது கிடத்தியும், அவன் உயிர் பிரியும்போது தாமும் ஒருங்கே உயிர் நீப்பதை உணர்த்தியும் தமிழ் நாட்டு மகளிரின் உயிரினும் சிறந்த செயிர் தீர்க் கற்பி ைக் கவிஞர் காட்டும் திறம் எண்ணி எண்ணி மகிழ்வதற்கு உரியது. வாயினுள் மாற்ருர் விட்டவேல்கள் ப ய் ந் த நிலையில் அவற்றினைத் தம் வலக்கையிஞல் ப ற் றி க் கொண்டு சில வீரர்கள் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக் கின்றனர். இக் காட்சி ஊது கொம்பு ஊதுவோரின் காட்சியைப் போன்றுள்ளது என்று கூறுகின் ருர் கவிஞர். வாயி னில்புகு வேல்கள் பற்று வலக்கை யொடு தி லத்திடைச் சாயு மற்றவர் காளம் ஊதிகள் தம்மை ஒத்தமை காண்மினே." {வாய்-தம்வாய்; காளம்-ஊது கொம்பு)

               20.         தாழி-483 2. தாழி-98