பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வப் பரணி 25. (தரை திறந்த வாய்கள்-வெடிப்புக்கள்; சாயை-ஞாயிற்றின் மனைவி; பரிதி-ஞாயிறு, கரம்-கை, திளைத்தல் , தொழிலில் இடைவிடாது பயிலல்.) என்று தன் கற்பனை நயம் தோன்றப் புலப்படுத்து கின்ருர், வெடிப்புக்களில் கதிரவனின் கதிர்கள் பாய்ந்து செல்வது கதிரவன் தன் துணைவியாகிய சாயாதேவியின் பிரிவைப் பொருமல் அவளைப் பல இடங்களிலும் தேடித் திரிவதாகக் கவிஞர் தான் கருதிய வேருென்றினை ஏற்றிச் சொல்லும் திறம் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. இங்ங்ணமே, உயர்வு நவிற்சியணிகள் பொருள்களின் மேம்பாட்டைப் புலப்படுத்துகின்றன. சிலேடையணி களில் கூறப்பெறும் பொருள்கள் இருவேறு வகைப்பட்டு இன்பம் தோன்றத் துணைசெய்கின்றன. சில இடங்களில் காணப்பெறும் யமகம், திரிபு போன்ற சொல்லணிகளும் நூலினைச் சிறப்பிக்கின்றன. இவற்றினை விரிக்கிற் பெருகும். நூலில் நகை, அழுகை,இனிவரல், அச்சம், மருட்கை, பெருமிதம், வெகுளி, உவகைச் சுவைகள் ஆங்காங்கு அமைந்து நூலைச் சிறப்பிக்கின்றன. எடுத்துக்காட்டாக பொருதடக்கை வாள்.எங்கே மணிமார் பெங்கே போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத பருவயிரத் தோளெங்கே எங்கே என்று பயிரவியைக் கேட்பாளேக் காண்மின் காண்மின். ' (மணி-அழகிய; வயிரம்-அழுத்தமானது: பயிரவி-யோகினி) என்ற தாழிசையில் அழுகைச் சுவையைக் காண்க. போர்முடிந்தபின் திரும்பி வராத தன் கணவனைத் தேடிப் போர்க்களத்துக்குப் புறப்பட்டுச் சென்ற ஒரு நங்கை போர்க்களத்தை யடைந்து முகம். கை, கால் 39TF-8'