பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமாள் 23 அவ்வளவு என்று அளவிட்டுச் சொல்லமுடியாது. இவைகள் இயற்றப்பெருமல் இருந்திருந்தால் தமிழ் இலக்கியக் கருவூலம் எவ்வளவு குறைவுபட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் இவைகளின் ஒப்பற்ற பெருமை நன்கு விளங்கும். சைவ சமயக்குரவர்களாகிய அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மானிக்கவாசகர் போன்ருர் ஏராளமான பக்திப்பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களைப்போலவே ஆழ்வார்களும் ஏராளமாகப் பாடியுள்ளனர். தமிழ்க் கவிதையில் உள்ளத்தை உருக்கக்கூடிய ஒரு தனிச் சிறப்பு ஆழ்வார் பாசுரங்களுக்கு உண்டு. தமிழ்நாட்டில் பக்திமார்க்கம் பரவுவதற்கு ஈடும் எடுப்பும் அற்ற இனிமைத் தமிழ் ஒரு சிறந்த கருவியாக இருந்து வந்திருக்கின்றது. மக்களைத் தன் இனிமையால் தன்யால் ஈர்க்கும் த ன் னே ரி ல் லா த் தமிழ் ஆண்டவனையும் ஈர்த்திருக்கின்றது. திருமால் அன்பர்களின் தமிழுக்கு வசமாகி அவர்கள் பின் சென்ற கதை த மி ழ க ளின் இதயத்தைக் கொள்ளைகொண்டிருக்கின்றது. முருகக் க ட வு எளி ன் அருள் பெற்றுப் பாடிய குமரகுருபர அடிகள், 'பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே' என்று பாடியுள்ளதை நாம் படிக்கும்போது இவ்வுண்மை நமக்கு நன்கு தெளிவாகின்றது. தமிழர்கள் ஆண்டவனைப் பலவிதமாகத் தொழுதுப் னர். தங்கள் தங்கள் மனுேபாவத்