பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமாள் 33 ஒவ்வொரு சங்கிலியாகப் பிடித்து ஆட்டக்கூடிய ஊஞ்சல் ஆட்டம், பார்ப்போரது கண்களுக்கு ஒரு பெரிய விருந்து போல் இருக்குமல்லவா? ஊஞ்சல் ஆ டு ம் போது பாட்டுப்பாடவேண்டு மல்லவா? பகவான் திருமுன்னர் பாடப்படும் பாடல்கள் இக்காலத்தில் சினிமாப்படங்களில் கேட்கப்பெறும் பாடல் களைப்போல் இருக்கலாமா? பாடும் பாடகர்கட்கும் உயர்ந்த நிலை வேண்டாமா? ஆகவே நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயா ழ் வார், திருமழிசைப்பிரான், குலசேகரப் பெருமாள், பட்டர் பிரானுகியபெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், பாண்பெருமாளாகிய திருப்பாணுழ்வார், திருமங்கை யாழ்வார், மதுரகவியாழ்வார், நாதமுனிகள், பெரியநம்பி ஆகியவர்கள் திருவாய் மலர்ந்தருளிய .ெ த ய் வ ப் பாடல் களை - திவ்யப்பிரபந்தங்களை - பாகவதசிரோ மணிகள் பாடுகின்றனர். இவர்களேயன்றி தும்புருவும் நாரதரும் இன்னுேசைப் பாடல்களைப் பாடுகின்றனர். சில அடியார்கள் தமிழ் வேதங்களையும், சில அடியார்கள் வட மொழி வேதங்களையும் ஓதி நிற்கின்றனர். இன்னும் ஒரு கூட்டம் இராமானுசரது வெற்றியினையும், கூரத்தாழ் வா ர து சிறப்புக்களையும், முதலியாண்டானுடைய கருணைத் திறத்தையும் பாடிக்கொண்டிருக்கின்றது, இன்னும், திருக்கலியனுக்கர், திருப்பணிசெய் அன்பர் முதலிய பக்தகோடிகள் தொழுது வழிபாடு செய் து நிற்கின்றனர். ஆகவே, ஆடும் பெருமாள் முன்னர் ஒரு பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டு தெய்வப் பாடல்களை இசைத்து நிற்கின்ற காட்சியை நாம் காண் கின்ருேம். இத்தகைய ஒருபெரிய அவையின் முன்னர் ஊஞ்சல் ஆடும் பெருமாள், அ. வி. 3,