பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அறிவுக்கு விருந்து "கான்பூத்த தனிச்செல்வன் சிலையுண் மின்னற் கருமுகில்போல் கனமணிவா சிகையினுப்பண் தேன் பூத்த தாமரையாள் மார்பில் ஆடக்" (கான்பூத்த தனிச் செல்வன்-இந்திரன்; கான்-கற்பகக் காடு, சிலே- வில்; கருமுகில்- கரிய மேகம்; கணம்-கூட்டம்; வாசிகை-மாலே, நாப்பண்-நடுவில்; தேன் பூத்த தாமரையாள்இலக்குமி! காட்சி யளிக்கின் ருர். இந்திர தனுசின் நடுவில் தோன்றும் காளமேகத்து மின்னற் கொடிபோல, நீலமேக சாமள வர்ணளுன திருமாலின் மார்பிலே, நவரத்தினங்களாலியன்ற மாலையினிடையே, பெருமாள் ஆடும்போது இலக்குமிதேவி அசைந்து நிற்கும் காட்சி நம் உள்ளத்தைக் கொள்ளே கொள்ளுகின்றதல்லவா? மேலே கூறிய கவிஞர் இலக்குமிக்கும் திருமாலுக்கும் ஒருவமை காட்டியதுடன் நின்றுவிட்டார். இன்னுெரு கவிஞர் கூறுவதைக் காண்போம். இலக்குமியைத் தன் மார்பகத்தேகொண்டு ஊசல் ஆடும் திருமாலைக் கண்டதும் அவர் கண்முன் பல காட்சிகள் தோன்று கின்றன, நறுமணங்கமழும் காயா மரமும் அதில் ஏறி உட்கார்ந்திருக்கும் மயிலும், பச்சிலை மரச்சோலையும் அதில் பொருந்திய அழகிய கிளியும், நீலநிறத்துடன் காட்சியளிக்கும் மலையும் அதில் ஓடி விளையாடும் இளைய பெண்மான் கன்றும், நீலக்கடலும் அதில் படர்ந்து விளங்கும் பவளக்கொடியும், காளமேகமும் அதில் தோன்றி விளங்கும், மின்னற்கொடியும், சான்ருேர் கவி' போல் கிடக்கும் யமுனைநதியும் அதில் வாசஞ்செய்யும் அன்னப்பேடும் அவர் கண்முன் காட்சியளிக்கின்றன. அவைமட்டுமா? மூன்றுலகும் ஈன்ருனைப் பெற்றெடுத்த கோசலையின் கண்மணியாகிய இராமனும், வடமதுரையில்