பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அறிவுக்கு விருந்து கவிஞரின் திறமையை உன்னுந்தோறும் உவகை பொங்குகின்றதல்லவா? இதில் உள்ள இன்னொரு நயமும் கருதத்தக்கது. திருமால் மார்பில் இலக்குமி இருத்தல் போலவே, ஒவ்வொரு இடமும் அவ்விடத்திலிருக்கும் பொருளும் இணை இணையாகச்சேர்த்துக்காட்டிய சிறப்பும் இவ்விடத்தில் எண்ணி மகிழ்தற்குரியது. பெருமாள் ஊஞ்சலில் ஆடும்போது அவருடன் சேர்ந்து வேறு சிலவும் ஆடுகின்றனவாகக் கவிஞர் கூறுகின் ருச்: ஆசனங்கள் ஒரு நான்கும் அன்பர் நெஞ்சும் அனிசிலம்பும் அடி விடா (து) ஊசல்ஆட; வாசனங்கு மு:லமடவார் கண்ணும் வண்டும் வண்டுளவும் புயம் விடா(து) ஊசல் ஆட: |ஆரணங்கள்.வேதங்கள்; வார்-கச்சு, தனங்களின் மீது அணியப்பெறுவது; வண்டுளவுவண் - துளவு - வளப்பமான திருத்துழாய் மாலை) என்று காட்டுகின் ருர் பெ ரு மா ள் ஆடும்போது அவருடைய திருவடிகளில் விளங்குகின்ற நான்கு வேதங்களும் சேர்ந்து ஆடுகின்றனவாம். கடவுளையே தியானித்துக்கொண்டு த ம் ம ன த் தை ஆண்டவன் திருவடிபால் செலுத்திக் கொண்டுள்ள எண்ணிறந்த அடியார்களுடைய மனங்களும் பெருமாளின் திருவடி களுடன் சேர்ந்து ஆடுகின்றன. கச்சணிந்த மாதர்கள் எம்பெருமானுடைய .ே த ர ன் அ ழ கி ல் ஈடுபட்டு அவற்றையே கண்டுகொண்டு நிற்றலால் அவர்கள் கண் களும் அப் புயங்களுடன் சேர்ந்து ஆடுகின்றனவாம். திருத்துழாய் மலச் மாலையில் மொய்த்துக்கொண்டிருக் கும் வண்டுகளும் சேர்ந்து ஆடுகின்றன.