பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமாள் 37 இவற்றைத் தவிர, பெருமாள் அணிந்துள்ள எல்லா அணிகளும் ஆடுகின்றன என்பதைக் காட்டுந் திறன் படித்து இன்புறத்தக்கது. ஆண்டவனது திருவடிகளில் அணியப்பெற்ற கிண்கிணிகளும் பாத தண்டைகளும் ஆடுகின்றன. அவருடைய மார்பிலுள்ள கெளஸ்துப ரத்தினம் ஆடுகின்றது; இலக்குமி அசைந்தாடு கின்ருள். இரத்தின ஆரமும், திருத்துழாய் மாலையும் தோள்களில் அசைந்தாடுகின்றன. ஒரு கையிலுள்ள சங்கும், மற்ருெரு கையிலுள்ள சக்கரமும் அசைந்தாடு கின்றன. திருமுடியிலுள்ள கருங்குழல் முடியும். அதில் அணியப்பெற்றுள்ள மலர்க் கண்ணியில் மொய்க்கும் வண்டுகளும் ஆடுகின்றன. முழுமதியைப் போன்ற திருமுக மண்டலத்தில் சிறுத்து அரும்பும் வியர்வைத் துளிகளும், காதுகளில் அணிந்துள்ள காதணிகளும் ஆடுகின்றன. இடுப்பில் கட்டியுள்ள அரைஞாணும் திருப்பரியட்டமும் அசைந்தாடுகின்றன. இவற்றைக் கவிஞர், அடித்தலத்திற் பசிபுசமும் சிலம்பும் ஆட அணிமார்பில் கெளத்துவமும் திருவும் ஆடத் தொடித்தலத்தின் மணிவடமும் துளவும் ஆடத் துணைக்கரத்திற் சக்கணமும் சங்கும் ஆட முடித்தலத்திற் கருங்குழலும் சுரும்பும் ஆட முகமதியற் குறுவேர்வும் குழையும் ஆடக் கடித்தலத்தில் அரைஞாணும் கலையும் ஆட (அடித்தலம்-திருவடி பரிபுரம்-கிண்கிணி, சிலம்பு-பாத தண்டை, கெளத்துவம்-கெளஸ்துவ ரத்தினம்; திரு-இலக்குமி; தொடித்தலம்-தோள், மணிவடம்-இரத்தின ஆரம்; துளவு. திருத்துழாய் மாலை;துணைக்கரம்-இரண்டு கரம்; முடித்தலம்-தலை; குழல்-உரோமம்; சுரும்பு-வண்டு; முகமதி-பூர்ணசந்திரன் போன்ற முகம் குறுவேர்வு-சிறுத்து அரும்பும் வியர்வைத்