பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. புகையிலையின் மகிமை : புகையிலே நம் நாட்டிற்குப் புதிதாக வந்த பொருள். இப் புதிய பொருள் மக்களிடையே ஆதிக்கியம் செலுத்து வதைப்போல் வேறு எந்தப் பொருளும் செலுத்தவில்லை என்று சொல்லலாம். இப் பொருள் எந்த அவதாரம்' எடுத்தாலும் அந்த அவதாரத்தின் மகிமையை இவ்வளவு அவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாது. ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஏராளமான பக்தர்கள் .ே ச ர் ந் து வி டு கி ன் ற, ன ர். அந்தந்த அவதாரத்தைப்பற்றி செய்யப்பெறும் விளம்பரங்களின் விளேவாகப் புதிய பக்தர்களும் சேர்ந்துகொண் டிருக்கின்றனர்!

இத்தகைய பல் பெருஞ் சிறப்புக்கள் வாய்ந்த புகையிலேயைப் பல புலவர்கள் பலவாருகப் பாராட்டு கின்றனர், ஒரு புலவர் கூறியுள்ள பாராட்டு விடுகதை போல் அமைந்திருக்கின்றது. அவர் கூறுவது: ந:லெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும் காலுந் தலேயுங் கடைச்சாதி-மேலாக ஒட்டு முதலெழுத்தும் ஒதுமூன் ரும்எழுத்தும் விட்டாற் பரமனுக்கு வீடு. 'புகையிலே விடுதுசது -என்ற சிற்றிலக்கியத்தைத் தழுவி எழுதியது. தமிழ்நாடு புத்தாண்டு இதழில் (1958) வெளிவந்தது.