பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அறிவுக்கு விருந்து இல்லை. அ வ ற் றி னே க் கு றி த் து விளம்பரங்கள் க ச ட் - ப் பெ ரு த ப ட க் காட் சி க ள் இல்லை. படக்காட்சியில் இடைவேளையிலோ, காட்சிகள் மாறும் போதே காட்டப்பெறும் விளம்பரங்களின் ஆற்றல் பட க் க ட் சி நடைபெறும்போதே புகையிலையின் பல்வேறு அவதாரங்களையே கொட்டகைக்குக் கொண்டு வந்து விடுகின்றன. பீடி, சிறுசுருட்டு (சிகரெட்),சுருட்டு ‘வகையருக்களின் தரிசனம் படக்காட்சிக்கொட்டகையில் 'நட்சத்திரங்கள் போல் காட்சியளிக்கின்றன! அவற்றி லிருந்து புறப்படும் புகையெல்லாம் ஆகாயம்போல் ஆகிவிடுகின்றது. புலவர் ஒருவர். ஆகாயம் உன் புகைபோல் ஆனமையா லே அரணுச் ஆகாய மேகாயம் ஆயினும் என்று கூறியுள்ளார். புகையிலையிலிருந்து வெளிப்படும் புகைபோல் ஆகாயம் இருத்தலால் சிவபெருமான் ஆகாய வடிவமாயிஞராம். சிதம்பரத்தில் சிவபெருமான் ஆகாய வடிவமாக இருக்கின்றதாக ஐதிகமல்லவா? இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த புகையிலையின் தோற்றத்தைப்பற்றி வழங்கிவரும் கதை இது: ஒரு சமயம் நான்முகன், சிவபெருமான், திருமால் ஆகிய மூவருக்குள்ளேயும் ஒரு வழக்கு உண்டாயிற்று. தமக்குள் அவ் வழக்கைத் தீர்த்துக்கொள்ள அவர்களால் இயல வில்லை. ஆகவே, அவர்கள் மூவரும் தேவர்களின் அவைக்கு வந்து தமது வழக்கை எடுத்துரைத்தனர். தேவர்கள், ! உங்கள் வழக்கை நாளைக் கவனிப்போம்" என்று கூறி அவர்களிடம் வில்வம் திருத்துழாய் புகையிலை ஆகிய மூன்றையும் கொடுத்து அவற்றை மறுநாள் அவைக்கு அவர்கள் வருங்கால் கொண்டு வருமாறு சொல்லியனுப்பினர்.