பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 புகையிலையின் மகிமை AASAASAASAASAASAAAS உறையூர் சுருட்டு உலகப்பிரசித்தி பெற்றதல்லவா? 'தங்கபஸ்பம் புகையிலையைக் கேள்விப்படாதவர்களும் இருக்கமுடியுமா? உலகில் பிறந்த மக்களுக்குப் பாடம் கொடுத்து (கல்விகற்பித்து) அவர்களைச் சீலர்களாக்குவதைப் போலவே இந்தப் புகையிலைக்கும் பாடங்கொடுத்துச் சிறந்த பொருளாக்குகின்றனர். கல்லாத மாந்தர்களிடம் உயர்ந்த பண்புகள் வெளிப்பட வாய்ப்பு இல்லையல்லவா? புகைவண்டி நிலையம், உந்துவண்டி நிலையம்போன்ற இடங்களிலும் "தங்கபஸ்பம்" போன்ற விளம்பரங்களைப் பார்க்கின்ருேம் அல்லவா? அஃது என்ன? பாடம் கேட்டு மேலோன் ஆன புகையிலைதான் அது. அதுதான், தாவில்பல வித்தையுடைத் தாகித் தமிழ்போல் நாவில் விளையாடும் நாமகளாய் விளங்குகின்றது. நான்முகன் ந வி ல் நாமகள் விளையாடுவது போலவும், கற்றறிந்த புலவர்கள் தாவில் தமிழ் தாண்டவமாடுவதுபோலவும், கற்ருேர் கல்லாதவர் என்ற வேறுபாடேயின்றி எல்லோர் நாவிலும் இப் புகையிலை விளையாடுகின்றது. என்னே புகையிலையின் பொதுவுடைமைக் .ெ கா ஸ் ைக! இருவகையினரும் சிறப்பாகப் "பாடங்கேட்ட" புகையிலையையே விரும்பு கின்றனர்; வ | ங் க வ; ம் செய்கின்றனர். தாம்பூலம் போடும் சிலருக்குப் புகையிலையில்லாமல் மு டி யா து என்பதை நன்கு உணர்ந்த கவிஞர், தாம்பூல நாவுக்குச் சாம்;அது தானும் உன்றன் காம்பில் அடக்க மன்ருே? கட்டழகன்! என்று கூறுகின்ருர், நாகரிகம் வாய்ந்த மக்கள் பெரும் பாலும் பாடம் பண்ணின புகையிலை வகையருக்களை