பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

链翁 அறிவுக்கு விருந்து - - - - vo, ;究 - உபயோகித்தாலும், ஏழை மக்கள் வெறும் புகையிலைக் காம்பை மட்டிலும் வாயில் அடக்கிக்கொண்டு காலங்கழிக் கின்றனரல்ல்வா? :கைதொகை இல்லாத கணக்கும் புகையிலே இல்லாத பாக்கும் வழவழ கொழகொழ’ என்ற பழமொழியையும் நாம் கேள்விப்பட்டுத்தானே இருக் கின்ளுேம்? திருமூக்கமுது (மூக்குப்பொடி), சுருட்டு, சிறுசுருட்டு, பீடி முதலிய அவதாரங்களாகப் புகையிலை எடுக்கும் போதுதான் அதன் மகத்துவம் மிகுகின்றது. வெள்ளைக் கார நாகரிகத்தை அப்படியே நகல் எடுக்கும் நபர்கள்தாம் இந்த அவதாரங்களின் பக்தகோடி சிகாமணிகள். வெள்ளேக்காரர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய நல்ல பண்புகளையெல்லாம் வி ட் டு விட்டு, அவர்களைப்போல் உண்ணுதல், உடுத்தல், கு டி த் த ல், புகைபிடித்தல் போன்ற வேண்டாத-நம் நாட்டின் தட்பவெப்ப நிலை களுக்குச் சிறிதும் பொருந்தாத-பழக்கங்களை மக்கள் கைக்கொண்டிருக்கின்றனர். முதலாவது நமக்கு புகை பிடித்தல் அவசியமா? காலைக்காபி அருந்தாமலோ புகை சுருட்டு பிடிக்காமலோ மலங்கழிக்க முடியாத நிலையிலும் மக்கள் துன்பப்படுகின்ற அளவுக்குப் பழக்கம் அவர்களை அடிமைப்படுத்தியிருக்கின்றது. சாதாரண ஏழைமுதல் பணக்காரர்வரை, கல்லாதார் முதல் கற்றறிந்தார்வரை, சுருட்டுப் பக்தர்களாக இருப்பதை நினைந்து, கற்றுத் தெளிந்த கனப்ரபல வான்களும்உன் சுற்றுக்குள் ஆவதென்ன சூழ்ச்சியோ? என்று சுட்டி உரைக்கின்ருர் கவிஞர். இக் காலத்தில் மாளுக்கர் உலகையே சிறு சுருட்டு பிடித்தல்' என்ற பழக்கம் ஒரு தெசத்து நோய்போல் பிடித்துக்கொண்டிருக் கின்றது. நாட்டுப்புறத்திலிருந்து நகரங்களிலுள்ள