பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கவிதையனுபவம் கவிதையனுபவத்தைக் கூறப்புகுவது தேனின் இனிமையைப்பற்றி உரைப்பதோ டொக்கும். .ே த கன், உண்டு அனுபவிக்க வேண்டிய பொருள்; அங்ங்னம்ே கவிதையும் படித்து அனுபவிக்க வேண்டியதொன்று. கவிதையின் அனுபவத்தைச் சொற்களால் வரையறைப் படுத்தி அளந்து காட்ட இயலாது. பாவின் நயமெல்லாம் - யானும் பகர வல்லேனே ? ஆவின் பாற்சுவையை - நாழி அளந்து காட்டிடுமோ ? என்ற கவிமணியின் வாக்கு ஈண்டு சிந்தித்தற்குரியது, என்ருலும், கவிதையனுபவத்தில் திளைத்த ஒரு சிலர் தம் அனுபவத்தைச் சொற்களால் கூறியுள்ளனர்; இவ்வுலகில் மிக்க சுவையான பொருளையுண்ட ஒருவர், "வானமிழ்தம்போல் இனித்தது' என்று கூறுகின் ருர். அவர் பார்க்காத - உண்டு அறியாத - ஒன்றினைக் கொண்டு உண்டபொருளொன்றினை விளக்குகின்ருர். ஆளுல், அ.த னை க் கேட்போர் வானமிழ்தத்தை நன்கு அறிந்தவர்கள்போல் தலையை அசைக்கின்றனர். இது வீண் அசைப்பு அன்று கூறுவோர் சொல்வதை 1. கவிமணி சாதியும் பட்டிக்கட்டானும் 25