பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் 55 படையில் சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். இளைஞர்கள் அவற்றை ஆர்வத்துடன் கற்றுத்தெளித்து உணர்ந்து மகிழ்வார்களாக, உடலும் உள்ளமும் நன்னிலையில் உறவுகொண் டிருந்தால்தான் நல்லுணர்ச்சிகள் தோன்றி, கவிதையை அனுபவித்தற்குத் துணை செய்யும். உணர்ச்சிகளிள் திரட்சியே பற்றுக்கள் (sentiments) ஆகும். பற்றுக்களே நம்மைக் கவிதைகளை ப் படிக்கத் துண்டுபவை. உணர்ச்சிகளே மீ ப் ப ண் பு க் கு ம் (temperament) காரணமாக இருப்பவை. இவற்றின் காரணமாக நாம் பல் வேறு கவிதைகளைப் படிக்கின்ருேம். அவற்றைப்படித்து அனுபவிப்பதற்கேற்ற மனநிலைகளையும் பெறுகின்ருேம் இத்தகைய உணர்ச்சிகள் (feelings) உள்ளக்கிளர்ச்சிகள், (emotions) ஆகியவைபற்றி உடலியல், உளவியல் அடிப்படையில் நன்கு புரிந்துகொண்டால், உணர்ச்சி உள்ளக்கிளர்ச்சிகள் பற்றிய உ ள வி ய ல ள ர் கூறும் பல்வேறு கொள்கைகளை நன்கு அறிந்து தெளிந்தால், கவிதையனுபவம் இன்னமுறையில்தான் நம்மிடம் ஏற்படுகின்றது என்பதை நன்கு உணரலாம். வாழ்க் கையில் நமக்கேற்படும் உணர்ச்சிகட்கும் கவிதைகளைப் படிக்கும்போது நாம் பெறும் உணர்ச்சிகட்கும் வேறுபாடு உண்டு என்பதை நாம் தெளிவாக அறிதல் வேண்டும். நாம் கவிதையைப் படித்துத் துய்ப்பது தூண்டல்துலங்கல் (stimulus-response) தத்துவத்தை அடிப்படை யாகக் கொண்டது. புற உலகிலுள்ள பொருள்கள் நம் புலன்களைத் துரண்டுவதால்தான் நாம் செய்திகளை அறிகின்ருேம்; இதைத் தவிர நமக்குக் கருத்து நிலையில் (ideational level) ஏற்படும் செயல்களாலும் தூண்டல்கள் ஏற்படுகின்றன. ஒரு கவிதையைப் படிக்கும்பொழுது இரண்டாவதாகக் குறிப்பிட்ட தூண்டல்களே நமக்கு