பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 7 கவிதையனுபவம் பெற்று அவற்றின் சாறுகள், குறிப்பாக மாங்காய்ச்சுரப்பி assifsir (adrenal glands) &r possir, குருதிழோட்டத்தில் கலந்து உடலெங்கும் உணர்ச்சியலைகளை எழுப்பு கின்றன. வ | ழ் க் ைக யனுபவத்தில் இவ்வித உணர்ச்சிகள் ஏற்படுங்கால் இத்தகைய உடல் மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பது உளவியல் காட்டும் உண்மை. வெகுளிச்சுவை, அவலச்சுவை, மருட்கைச் சுவைபோன்ற சுவைகள் உள்ள கவிதை களைப் படிக்கும்பொழுது அவற்ருல் பெறும் செய்திகள் பெருமூளையில் பல்வேறு எண்ணக் கோவைகளை எழுப்பி மேற்குறிப்பிட்ட நிலைமைகளை உண்டாக்குகின்றன என்று ஊகம் செய்யலாம். இதனுல்தான் கவிதை யிலுள்ள கவிஞனின் உணர்ச்சிகள் நம்மிடமும் எழுகின்றன. பக்திச்சுவை மிக்குள்ள திருவாசகத்தை ஒதினுல் ஏற்படும் நிலையைச் சிவப்பிரகாச அடிகள், திருவா சகம்இங் கொருகால் ஒதின் கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய அன்பர் ஆகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையர் இலரே." என்று எடுத்தோதுவதல்ை இதனை அறியலாம். உயர்ந்த கவிதைகள் யாவும் அவற்றில் ஈடுபட்டுப் படிப்போரிடம் கவிஞர்களின் அனுபவத்தையே ,ெ ப ற ைவ த் து விடுகின்றன. - அறிவுநிலை வேறு, உணர்விநிலை வேறு என்பதை நாம் நன்கு அறிவோம். நீதி நூல்களைப்படிக்கும் போது பலகருத்துக்களே அறிந்து கொள்ளுகின்ருேம்; அவை மூளைக்கு விருந்தாக அமைகின்றன; அப்பொழுது 5. நால்வர் நான்மணிமாலை-4