பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் 6i கனியைத் தம் இனமாகிய ஒரு வண்டு என நினைத்து அதனை ஞெண்டின் பிடிப்பினின்றும் விடுவிக்கக் கருதி அதனைச் சூழ்ந்து பேரிரைச்சலுடன் பற்க்கின்றன. இவ் விரைச்சல் அருகில் உணவினை நாடி அற்றம் பார்த்திருக்கும் நாரையின் செவியிற் படுகின்றது. அஃது உடனே .ெ ஞ ண் டி னை ப் பற்றிச் செல்லுகின்றது. நாரையின் வருகையை உணர்ந்த ஞெண்டு நாவற் கனியை விட்டு ஓடிவிடுகின்றது. இதனைக் கவிஞர், பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் பல்கால் அலவன் கொண்டகோட் கூர்ந்து கொள்ள நரம்பின் இமிரும் பூசல் இரைசேர் நாரை எய்தி விடுக்கும் துறை கெழு மாந்தை அன்ன." (திரை-அலை; புன்கால்-மெல்லிய காம்பு; இருங்கனிகரியகணி; செத்து-கருதி, தும்பி-வண்டு; அலவன்-ஞெண்டு; பூசல்-ஒலி.j என்று வருணிக்கின்ருர். நாவல் மாத்தருகில் தாம் கண்ட காட்சிகளனைத்தினையும் கவிஞர் கூறியிருப்பா ராயின், கற்பனை இவ்வாறு சிறந்திருக்காது, தம் உள்ளம் விழைந்த காட்சிக்கு வேண்டாதவற்றை விட்டு,வேண்டிய சிலவற்றைத் தருவித்துக் கூட்டி ஓர் அழகிய கற்பனையை அமைத்து விடுகின்ருர் கவிஞர். கவிதைகளில் இடத்திற்கேற்பச் செய்யுளிள் நடைக் கேற்பச் சொற்கள் யாதொரு தட்டுத் தடையுமின்றி விரைந்து வந்து உதவும் நிலையே சொல்வளம் (diction)