பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் §§ பிரித்துப் பிரித்து நித மேக மனந்தே, பெற்றதன் முகமன்றிப் பிரிதொன் றில்லை; சிரித்த ஒலியினிலும் கைவி லக்கியே திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்’ என்ற பாரதியின் பாடல்களில் அன்புணர்ச்சி கலந்த காதலன்-காதலிப் பேச்சினைக் காண்க. இவற்றில் வந்த சொற்களே திரும்பத் திரும்ப வந்தாலும், அவை சொல்வித்தை போன்ருே அல்லது விளையாட்டாகவோ இராமல் விழுமிய உணர்ச்சி மேன் மேலும் சிறந்து பொலிவதை உணர்க. மேலும், பின்னைக் கணியமுதே-கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே அள்ளி யணைத்திடவே-என் முன்னே ஆடி வருந்தேனே. கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி, உன்னைத் தழுவிடிலோ-கண்ணம்மா உன் மத்த மாகுதடி சொல்லு மழலையிலே-கண்ணம்மா துன்பங்கள் தீர்ந்திடுவாய் முல்லைச் சிரிப்பாலே-எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய். இன்பக் கதைகளெல்லாம்-உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ? அன்பு தருவதிலேடஉனேநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ? மார்பி லணிவதற்கே-உன்னைப்போல் வைர மணிகளுண்டோ? சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ?" 9. பாரதி: கண்ணம்மா-என்காதலி. 10 பாரதி: கன்னனே..என்.குழந்தை