பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் 65 காலம் வந்துவிடுகின்றது. தலைவன் வரவில்லை. இந்த நிலையில் தலைவி தலைவனை நினைந்து நினைந்து எங்கு கின்ருள். வேம்பின் ஒள்ளிய மலர்கள் பூத்து நிற்கின்றன. என் தலைவர் இங்கில்லாமையால் நான் அப் பூக்களைச் சூடாமல் ஒழிவதோ? யாற்றின் அருகில் ஓங்கிய வெள்ளிய கொம்புகளையுடைய அத்தியில் பழுத்த ஒரு பழத்தை ஏழு நண்டுகள் பற்றுங்கால் அது குழைந்து நிற்பது போல, யான் குழைந்து நிற்கின்றேன். ஆல்ை, அவர் மிகக்கொடியவர் எனக்கூறும் தோழியர் முதலா ளுேரின் நாக்கள் குழைவின்றிக் கல்லென வாயின.” என்கின்ருள். கருங்கால் வேம்பின் ஒண்பூ யானச் என்னை யின்றியும் கழிவது கொல்லோ? ஆற்றயல் எழுத்த வெண்கோட் டதவத்து எழுகுளிர் மிதித்த ஒருபமும் போலக் குழையக் கொடியோர் நாவே காதலர் அகலக் கல்லென் ஹவ்வே." (கருங்கால்கரியகாம்பு; ஒண்பூ-ஒள்ளியபூ யாணர்-புதுவரு வாய்; அயல்-பக்கம்; கோடு-கிளை; அதவம்-அத்தி; குளிர்-நண்டு; கல்லென்றவ்வே-அலர்தூற்றி ஆரவாரித்தன.) என்ற பாடலைப் படிக்குங்கால் மேலே யுள்ள உரை நடையைப் படித்து உணர்வதைப் போல் தலைவியின் உணர்ச்சியை உணர முடிவதில்லை. ஆனால், பாட்டைத் திரும்பத் திரும்பச் சில முறை படித்தால் தலைவியின் உணர்ச்சியை ஓரளவு ஒருவாறு பெற முடிகின்றது. இப் பாட்டிலுள்ள ஒண்பூ யாணர், வெண்கோட்டதவம், எழுகுளிர், கல்லென்ற போன்ற சொற்களும் சொற் ருெடர்களும் இன்றைய தமிழ் வழக்கிலில்லாதவை. அ. வி. 5