பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அறிவுக்கு விருந்து - எனவே, தலைவியின் உணர்ச்சியை நாம் நன்கு பெற முடிகின்றதில்லை. தவிர, இப் பாடல் ஒலிநயம் குறைந்த ஆசிரியப்பாவில் அமைந்திருப்பதும் உணர்ச்சியை உணர்வதற்கு ஓரளவு தடையாகவே உள்ளது என்றும் கூறலாம. மேற்கூறிய தலைவியின் உணர்ச்சியை ஒலிநயம் மிக்க விருத்தப்பாவில் அமைத்தால் அவ்வுணர்ச்சியை எளிதாகப் பெற முடிகின்றது; அதுவும் இன்றைய வழக்கிலுள்ள சொற்களில் அமைந்து விட்டால், அறிதல் பின்னும் எளிதாகின்றது. அங்ங்ணம் அமைக்கப் பெற்ற இந்தப் பாடலைப் பாருங்கள்: மலர்ச்சூழல் அமர்ந்தினிய வண்டார்க்கும் காலம்; வசிக்குயில்கள் மாவில்இளந் தளிக்கோதும் காலம்; சிலர்க்கெல்லாம் செழுத்தென்றல் அமுதளிக்கும் காலம்; தீவினையேற்கு அத்தென்றல் தீவீசும் காலம்; பலர்க்கெல்லாம் கோன் நந்தி பன்மாடக் கச்சிப்; பனிக்கண்ணும் பருமுத்தம் பார்த்தாடும் காலம்; அலர்க்கெல்லாம் ஐங்கணைவேள் அலர்துற்றும் காலம்; அகன்றுபோ னவர்.நம்மை அயர்ந்துவிட்ட காலம்." இந்தப் பாடலை இசையுடன் படிக்குங்கால் அது நம் உள்ளத்தைக் கவர்ந்து விடுகின்றது; தலைவியின் 12 os o-60