பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் 67 உணர்ச்சியை நாம் நன்கு பெறுகின் ருேம். மேற்காட்டிய இரண்டு பாடல்களிலும் உள்ள உணர்ச்சி ஒரு தன்மைத் தாயினும் அதைப் புலப்படுத்தும் பாட்டின் ஒலிநயமும் யாப்பும் வேறு பட்டவை. முன்னதில் அமைந்துள்ள ஒலிநயமும் யாப்பும் கவிஞனின் உணர்ச்சியை நாம் பெறுவதற்குப் போதுமானவையாக இல்லை; பின்னதில் அவை போதுமானவையாக அமைந்துள்ளன. அணிகளும் கவிதைகளை அழகு செய்வதுடன் கவிதையனுபவத்திற்குத் துணை செய்கின்றன. உவமை, உருவகம், உயர்வுநவிற்சி, வேற்றுப்பொருள் வைப்பு, தற்குறிப் பேற்றம் போன்ற அணிகள் மிகவும் குறிப் பிடத்தக்கவை. ஒருபொருளை மொட்டையாகச் சொல்லு வதைவிட அழகாகச் சொல்லுவது கேட்போருக்கு இன்பம் பயக்கும் அல்லவா? இரண்டு அணிகளைக் கொண்டு இக் கருத்தினை விளக்குவோம். சேது.கட்டு வதற்குக் குரங்குகள் மலைகளை வேருடன் பறித்துக் கொண்டு வருகின்றன. நளன் என்ற வாணர தச்சன் மலைகளை வாங்கி வரிசைப்பட அமைக்கின்ருன். அங்ங்ணம் அமைத்திடுங்கால் பல நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. மரங்களோடு பொருந்திய வானுற வோங்கிய மலைகள் தாம் கடலில் வீழ்ந்தாலும் தம்மிடத் தேயுள்ள நறுங்கனிகள், காய்கள், தேன், ஊன், பூக்கள் முதலியவற்றை மீன்கள் உண்ணும்படி பொலியச் செய்தன என ஒரு நிகழ்ச்சியைக் கூறவந்த கம்ப நாடன் பெரியோர்கள் அடியோடு அழிந்தாலும் தம்முடைய வண்மைக் குணத்தை யொழிவார்களோ? என்று முடித்துக் காட்டுகின்ருன், தேமுதற் கனியும் காயும் தேனிளுேடு ஊனும் தெய்வப்