பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ அறிவுக்கு விருந்து பூமுத லசய எல்லாம் மீன்கொளப் பொலிந்த அன்றே மாமுதல் தருவோடு ஒக்கும் வானுயர் மானக் குன்றம் தன்முத லோடுங் கெட்டால் ஒழிவரே வண்மை தக்கோர்?" என்பது மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியைக் கூறும் கவிதை. ஒரு பொருளின் திறந்தொடங்கிப் பின்னர் அது முடிதற்கு வலியுடைய பிறிதொரு பொருளை உலகறி பெற்றியான் வைத்து மொழிவதை வேற்றுப் பொருள் வைப்பணி என்று குறிப்பர் இலக்கண நூலார். இந்தப் பாடலில் பழம், காய் முதலியவை மீனுக்கு உணவாதல்’ சிறப்புப் பொருள். பெரியோர்கள் அடியோடு அழிந் தாலும் தம் வண்மைக் குணத்தில் ஒழியார் என்பது பொதுெேபாருள். கவிஞன் சிறப்புப் பொருளைப் பொதுப் பொருளால் வைத்து முடிக்கின் ருன். இன்னுெரு எடுத்துக்காட்டு: வாலி தன் மீது பாய்ந்த அம்பைப் பிடுங்கி அதில் பொறித்துள்ள இராமன்' என்ற பெயரைக் காண்கின்ருன். இல்லறந் துறந்த நம்பி தங்கள் பொருட்டு வில்லறத்தையும் துறந்தனனே என்று நகைத்து நாணத்துடன் நிற்கும் வாலியின் முன்னர் இராமன் வருகின்ருன். கண்ணுற்ருன் வாலி நீலக் கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலை' என்று வாலி இராமனைக் கண்டதைக் கூறுகின்ருன். இங்கு இயல்பாக நிகழும் தன்மையில் கவிஞன் தன் 19. புத்தகா சேதுபத்தன-18 14. கிட்கிந்தை. வாலிவதை-81