பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் §§ கருத்தினை ஏற்றிக் கூறியுள்ளான். பொருளிகளிடத்து இயல்பாக நி க மு. ம் தன்மையில் கவிஞன் தன் கருத்தினை (குறிப்பினை) ஏற்றிக் கூறுவது தற்குறிப் பேற்ற அணியாகும். இயல்பாக இராமன் வாலிமுன் வருவதைக் கவிஞன், வானத்திலுள்ள நீலக் கார்முகில் தன்னிடம் தாமரை மலர் பூத்து நிற்க, கட்டமைந்த வில்லொன்றைக் கையில் ஏந்திக்கொண்டு வரும் திருமால்' என்று தன்னுடைய கருத்தினை ஏற்றிக் கூறியிருப்பதைக் காண்க. அணிகள் கவிதையனுபவத் திற்குத் துணை செய்வதை அறிந்து மகிழ்க. தொடைவகை என்பது எழுத்துச் சொற்பொருள் களை எதிரெதிர் நிறுத்தித் தொடுக்கப்பெறுவனவாகிய தொடை விகற்பம். இவை பூத்தொடை போலச் செய் யுட்குப் பொலிவு செய்வனவாகலின், தொடை என்பது மாலையைக் குறிக்கும். காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கப் படாதென்ருே-நாதம் அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ! ஒடி ஒளிக்கின்ற தென்னே உரை." (அலவன்-நண்டு; கார்க்கோடகன விட்டுப் பிரிந்த நளன் ஒரு நண்டினைப் பார்த்துக் கூறுவதாக அமைந்தது இப்பாடல். முதலடி யில் நான்கு சீர்களிலும் மோனை அமைந்துள்ளதால் இது முற்றுமோனைத் தொடையாகும். இரண்டாவது அடியிலும் மூன்று சீர்களில் மோனை அமைந்துள்ளது. முந்துார்வெம் பணிக்கொடியோன் மூதூரின் நடந்துழவர் முன்றில் தோறும் 15 நளவெண்பா-340