பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் 73 வலியால் பயன் பெருமல்’ என்ற தொடர் குந்தியின் ஊழ் உணர்ச்சியைக் காட்டுகின்றது; அஃது அவளது ஏக்கத்தையும் புலப்படுத்துகின்றது. இத் தொடரே இக் கவிதையின் தரத்தையும் பன்மடங்கு உயர்த்தி விடு கின்றது. படிப்போரின் கவிதையனுபவத்திற்கு ஒரு முத்தாய்ப்பு வைப்பதும் இத் தொடரேயாகும். வாழ்க்கை என்பது நிலைபேறுடையது; மானிட இனம் இவ் வுலகில் உள்ளவரைத் தொடர்ந்து நடை பெறுவது. வ ழ் க் ைக யி ல் இன்பமும் உள்ளது; துன்பமும் நிறைந்திருக்கின்றது. அதில் அல்லல்களும் தொல்லைகளும் காணப்பெறுகின்றன. ஆன்மாவைக் கொல்லும் பாவம் என்ற புற்றுநோய் அங்கு உண்டு; ஆழங்காணமுடியாத காதல் அங்கு காணப்படும். வாழ்வை வளமாக்கும் நம்பிக்கை, புகழ் மணக்கச் செய்யும் துணிச்சல் போன்ற பண்புகள் அதில் இட்ம் பெறும். இத்தனையும் பல படலங்கள் போல் க வி ழ் ந் து ஸ் ள வாழ்க்கை நம்மைக் கவர்கின்றது; ஆணுல் அஃது ஒன்று மட்டிலும் நமக்கு மன நிறைவினைத் தருவதில்லை. இத் தகைய வாழ்க்கையைப்பற்றிய உண்மையைக் கவிதை எடுத்துரைக்குங்கால் நாம் மன நிறைவு கொள்ளு கின்ருேம். இதல்ைதான் ஆங்கிலத் திறய்ைவாளர் மாத்யூ ஆர்னேல்டு என்பார் வாழ்க்கையின் திறனுய்வே கவிதையாகும்’ என்ருர். துன்பக் கடல்போன்ற இவ் வுலகில் மம்மர் அறுக்கும் மருந்தாக நின்று இன்பம் பயக்கவல்ல கவிதையை நாம் கவனிக்காவிட்டால், நமக்கு உலகில் ஆறுதல் அளிக்கக்கூடிய பொருளே இல்லையென் ருகிவிடும். கவிதையனுபவம் அவலக் கவலைகளையெல்லாம் மறக்கச் செய்யும் மாமலையிலுள்ள மருந்து போன்றது என்பதை நாம் என்றும் நினைவி 'லிருத்த வேண்டும்.