பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 75 என்று கவிதை இன்ன தென்பதைக் காட்டியுள்ளார். கவிதை சிறப்பது அதனைப் படைக்கும் கவிஞனின் அனுபவத்தைப் பொறுத்தது; அவன் அவ் வனுபவத் தைக் கூறும் முறையினையும் பொறுத்தது.

  • ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள் அனைத்தையும் பயன்நிறை அனுபவ மாக்கி உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து ឆ្អ ត្។ சாத்திரம் மகம்மது வீழ்ச்சி சின்னப் பையல் சேவகத் திறமை: எனவரும் நிகழ்ச்சி யாவே யாயினும் அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து இலெளகிக வாழ்க்கையில் பொருளினை இனக்கும் பேதைமா சத்தியின் பெண்ணே! வாழ்க’

என்ற பாரதியாரின் கவிதைத் தலைவியைப்பற்றிய பாடல் இக்கருத்தினை நன்கு விளக்குவதாகும். நம்மிடம் உணர்ச்சி இருப்பதாலும், அவ் வுணர்ச்சி யைப் பிறருக்கு உணர்த்தும் திறனை நாம் பெற்றிருப்ப தாலும் நாமும் ஒரளவு கவிஞன் நிலையில்தா னிருக் கின்ருேம். ஆனால், கவிஞர்கள் என்று நாம் போற்று பவர்களிடம் இவ்வுணர்ச்சி அதிகமாக இருக்கின்றது; தாம் உணர்ந்தவற்றை மிக நன்ருக, பிறரிடமும் அவ்வுணர்ச்சி கிளர்ந்தெழச் செய்யும் வகையில், வெளி யிடக் கூடிய வன்மையுள்ளவர்களாகவும் உள்ளனர். சுருங்கக் கூறின், அவர்களுடைய புலன்கள் எண்ணற் றவை; மிகக் கூர்மையானவை. அவர்களுடைய குரல் களும் சாதாரண மக்களுடைய குரல்களைவிட மிக அகன்றவை. நாமெல்லோரும் ஓர் அரைக் குருடனைப் 2 பாரதியார் பாடல்கள்- கவிதைத் தலைவி.