பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அறிவுக்கு விருந்து குற்ருலத்தில் தங்கும் பொழுதெல்லாம் தேனருவி யைப் பார்க்கின் ருேம்; அதன் திரைகள் வானின் வழி ஒழுகுகின்ற வண்ணக் காட்சியையும் காண்கின்ருேம். சிலசமயம் “அந்த அருவி இன்னும் உயரத்திலிருந்து விழுந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்!” என்றும் நினைக்கின்ருேம். நம்மைப்போலவே அவாக்கொண்ட கவிஞர் திரிகூட சாசப்பர் தன்னுடைய கவிதைப் படைப் லே அந்த அவாவைத் தீர்த்துக் கொள்ளுகின்ருர். "தேருைவித் திசையெழும்பி வானின்வழி யொழுகும் செங்கதிரேசன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்' இந்தக் கவிதையைப் படிக்கும் நம்முடைய அவாவும் ஓரளவு நிறைவேறி விடுகின்றது. இங்ங்ணம் கவிஞர் களின் ஆழ்ந்தகன்ற புலன் காட்சிகள் நம்முடைய புலன் காட்சிகளையும் விரிவடையச் செய்கின்றன; கவிஞர்கள் பெற்ற அனுபவத்தையே நாமும் ஒரளவு பெறுகின் ருேம்; அவர்களிடம் உண்டான மகிழ்ச்சியே நம்மிடமும் ஏற்படுகின்றது. அவர்கள் மனநிலையே நம்மிடமும் உண்டாகின்றது. கற்பனை என்பது கவிஞன் படைப்பில் மேற் கொள்ளப்பெறும் ஓர் இன்றியமையாத கூறு; அவன் கையாளும் யுக்திமுறைகளில் மிகவும் முக்கியமானது. கற்பனை என்பது புலன்கள் நேரே ஒரு பொருளை அனுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினை விற்குக் கொண்டுவந்து அப்பொருளினிடத்து மீண்டும் அனுபவத்தை ஏற்றவல்ல ஒருவகை ஆற்றலாகும். அது கவிதைகளைக் கனிவித்துக் கற்போரின் மனத்தை திருக்குற் குறவஞ்சி-க்கி (கண்ணி-3)