பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 79 விரிந்த பார்வையில் செலுத்தவல்லது. கவிதைகளின் பிற பண்புகளுக்கெல்லாம் அடிநிலமாக அமைவது இது தான்; முடியாக இருப்பதுவும் இதுவே. இத்தகைய கற்பனையாற்றலை இன்னது என்று சொற்களால் எல்லை கட்டிக் காட்ட இயலாது. ரஸ்கின் என்ற மேட்ைடு நுண் கலைத் திறனுய்வாளர் "கற்பனையின் தத்துவம் அறிவுக்கு எட்டாதது; சொற்களால் உணர்த்த முடியாதது; அதன் பலன்களை மட்டிலும் கொண்டே அஃது அறியப்பெறுவ தொன் ருகும்’ என்று குறிப்பிடுகின் ருர், - கவிஞன் பகுத்தறிவைப் பெரிதாக்காமல் கற்பனையை நம்பி வாழ்பவன். கற்பனை என்பது இல்லாததை இருப்ப தாகவும், இருப்பதை இல்லாததாகவும் எண்ணும் பொறுப்பற்ற விளையாட்டன்று. உள்ளதை உள்ளவாறு கூருமல், அதனை உள்ளம் விரும்பி உவகையடையு மாறும், பிறருக்கு நேருவதைத் தனக்கு நேருவதுபோல் உணருமாறும் கூறவல்ல ஆற்றலே-திறமையே-கற் பனையாகும். எனவே, உண்மையுலகிற்கும் கற்பனையுல கிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தே திரும். மக்களும், விலங்குகளும், மரம் செடி கொடிகளும் அடங்கிய உலகைப் புலன்களாலும் உணர்வாலும் காண்பது கவிதையின் முதற்படியாகும்; புதிய உலகினைப் படைப் பது இதன் இறுதிப்படியாகும். உலகத்தை வெறுத்தோ அல்லது மறந்தேச கவிதை உருவாகாது. கவிஞனின் படைப்பு நமது உலகினை யொத்தும் ஒட்டியும்தான் இருக்கும். கவிஞன் கற்பனை செய்தல் பகற்கனவு காண்பதை யொத்தது. கனவு காண்பவர்கள் உள்ளதை உள்ளவாறு காண்பதில்லை; உள்ளம் விழையும்ாறே காண்கின்றனர். நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றின் அடிப்படையின்மேல்