பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ அறிவுக்கு விருந்து நடக்க வேண்டியவற்றைச் சேர்த்துக் காண்கின்றனர். தடக்க வேண்டியவற்றிலும் தம் உள்ளம் விரும்பும் வகை யில் அமைத்துக் காண்கின்றனர். அப்பொழுதுதான் மனம் அக்கனவில் நெடுநேரம் திளைத்து இருக்க முடியும். கவிஞர்கள் படைக்கும் கற்பனையிலும் இதே நிலைதான். இயற்கையைப்பாடும் கவிஞர்களும் உள்ளதை உள்ளவாறு பாடுவதில்லை. தாங்கள் விரும்புமாறு சில வற்றைக் கூட்டியும், சிலவற்றைக் குறைத்துமே பாடு கின்றனர். இதனுல்தான் அவர்களுடைய கவிதை கலைப் பண்புடன் அழியா வாழ்வு பெறுகின்றது. எனவே, உள்ளவாறு அமையும் கற்பனையில் கவிஞனுக்கு ஆர்வம் இல்லை என்பதையும், உள்ளம் விழையுமாறு அமையும் கற்பனையில் அவனுக்கு ஆர்வம் மிகுதி என்பதையும் அறிகின்ருேம். இந்த அடிப்படையில் கவிஞன் தான் காணும் உலகத்தைவிடச் சிறந்ததோர் உலகைப் படைக்க விழைகின்றன். இந்த விழைவே அவனது அகத்தெழுச்சிக்குக் (inspiration) காரணமாக நின்று புதியன படைக்கும் ஆற்றலைப் பெறவும் வாய்ப்பாக அமைகின்றது. சுனையில் சிறிதளவுதான் நீர் உள்ளது. அதனைப் பருகச் சென்ற ஆண்மானுக்கும் பெண்மானுக்கும் அந் நீர் போதாது. அதனை உணர்ந்த ஆண்மான் தான் குடிக்காமல் ஒதுங்கி நின்று பெண்மானைக் குடிக்குமாறு செய்ய எண்ணுகின்றது. பெண்மானும் அவ்வாறே ஒதுங்கி நிற்கின்றது. இதனையறிந்த ஆண்மான் ஒரு தந்திரம் செய்து பெண்மானைக் குடிக்கவைக்க எண்ணு கின்றது; பெண் மானுடன் நீரருகில் சென்று நீரில் வாயைவைத்து உறிஞ்சுவதுபோல் மூச்சுவிட்டுக் கொண் டிருக்கின்றது. பெண் மானின் நீர்வேட்கை தணிய