பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 81 வேண்டும் என்பதே ஆண்மானின் கவலை. இதனுல்தான் நீரின்றி வருந்தும் அளவுக்குத் தியாகம் செய்கின்றது. இந்த நிகழ்ச்சியைக் கவிஞன், சுனைவாய்ச் சிறுநீரை எய்த தென் றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாத்தன் கள்ளத்தின் ஆக்சும் சுசம்என்ப; காதலர் உள்ளம் படர்ந்த கெறி" ாதத் தந: என்ற கற்பனை ஓவியமாகத் தருகின்ருன். இங்ஙனம் நடைபெறுவது இயலாத தொன்று என்பதைக் கவிஞன் நன்கு அறிவான். ஆயின், அன்பின் காரணமாக ஆண் மான் பெண்மானுக்கு வேறு உதவி களைச் செய்தலை அறிந்த அவனுடைய உள்ளம் இவ்வாறு கற்பனை அமைக்க விழைந்தது. ஓரளவு கவிதை மனப்பான்மையுள்ள நாம் அதனைப் படித்து நன்கு அனுபவிக்கின்ருேம். கவிஞனுடைய அனுபவம் நம் அனுபவமாக மாறி விடுகின்றது. மேற்கூறிய உள்ளம் விரும்பும் கற்பனைக்கு வாழ்க்கை அடிப்படையாக அமைகின்றது. வாழ்க்கை யின் அனுபவமே அத்தகைய கற்பனையைத் துரண்டு கின்றது. துன்பம் உறுங்கால் வருந்துவதும், இன்பம் எய்துங்கால் மகிழ்வதும் எல்லா உயிர்கட்கும் பொது வாக இருப்பினும், மனிதவாழ்வில் மட்டிலுமே பழைய உணர்ச்சிகளின் நினைவுகள் மீண்டும் அத்தகைய அனுபவத்தை உண்டாக்குகின்றன. நேற்று உற்ற துன்பத்தையும் நாளைவரும் துன்பத்தையும் நினைந்து வருந்தும் உள்ளம் மனிதனைத் தவிர எந்த உயிர்க்கும் இல்லை; மனிதனிடம் மட்டிலும் அது நினைவு அளவில் 6. ஐந்திணை இங்கு-86 அ. வி. 6.