பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 3 கவிதையும் கற்பனையும் விழவுமுதிர் செம்மேனி வெண்ணிறு துன்னெழ மிகப்புழுதி யாட்டயர்ந்து விரிசடைக் காட்டினின் திருவிழிகள் சேப்பமுழு வெள்ளநீர்த் துளையமாடிக் குழவுமுதிர் செல்விப் பெருங்களி வாச்சிறு குறும்புசெய் தவன் வருகவே குசவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பசன்வருகவே." என்பது முருகன் செய்த சிறுகுறும்புக்களைக் காட்டும் குமரகுருபர அடிகளின் சொல்லோவியம். முருகனுடைய திருவாயினின்று ஒழுகும் தேன் போன்ற எச்சில் உலகின்ற அன்னையின் வெண் துகிலை நனைக்க, அவளது அழகிய வயிற்றின் மீது தவழ்ந்து பெருமானின் மார்பில் குரவைக் கூத்தாடுகின்ருன். அப் பெருமானின் கையிலுள்ள உடுக்கையைக்கொண்டு சிறு பறை முழக்குகின்ருன்; தலையிலுள்ள கங்கை நீரைக்கொண்டு கையிலுள்ள நெருப்பினை அவிக் கின்ருன் முடியிலுள்ள பிறை மதியை எடுத்து பெருமானுக்கு அணியாக அமைந்துள்ள அரவின் வாயில் செருகுகின்றன். பெருமானின் கையிலுள்ள மானுக்கு அப் பெருமானின் முடிமீதுள்ள அறுகினை உணவாக அருத்துகின்ருன், பெருமானின் செம்மேனி மீதுள்ள வெண்ணிறு தூள் எழுமாறு விளையாடு கின்ருகன். பெருமானின் விரிசடைக்காட்டிற் பாய்ந்து செல்லும் கங்கையாற்றில் தன் இருவிழிகள் சிவக்கும் அளவுக்கு நீராடி அயர்கின் ருன் இந்தக் குறும்புக்களைக் காணும் எம்பிராட்டி பெருமகிழ்ச்சி கொள்ளுகின்ருள் சாதாரணமாகச் சிறு பிள்ளைகள் தம் பெற்ருேசிடம் செய்யும் சிறு குறும்புக்களை நேரில்கண்ட அடிகள் 7 முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - செய். 32