பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அறிவுக்கு விருந்து முருகன், மேற்கண்டவைபோன்ற குறும்புக்களைச் செய்த தாகக் கற்பனையில் உணர்ந்து பாடியுள்ளார். இந்தக் கவிதையைப் படிக்கும் நாமும் களிகொண்ட அத்தாயின் மனநிலையைப் பெறுகின்ருேம். கவிஞன் கற்பனையில் பெற்ற அனுபவம் நம்முடைய அனுபவமாகி விடு கின்றது. கவிதையை நாம் மெய்மறந்து துய்க்கின்ருேம். உள்ளதை உ ன ர் ச் சி யு ட ன் கூறும்பொழுது கூட்டலும் குறைத்தலும் திரிபும் நேர்தல் இயல்பு. அறிவு எதனையும் அளந்து அறியும் தன்மையுடையது. உணர்ச்சியோ குறித்த ஒன்றை ஆழ்ந்து உணரும் தன்மையது. எனவே, பின்னைய செயலில் குறித்த ஒன்றினைத்தவிர, ஏனையவை அவ்வளவு தெளிவாக நிற்பதில்லை. ஒரு பொருளின் ஒரு கூறு மட்டிலும் தெளிவாக - மிகுதியாக - உணர்த்தப்பெற, மற்றவை மங்குகின்றன; அல்லது மறைகின்றன. ஒன்றை எடுத்துக்காட்டுவதற்காக மற்றவற்றை வேண்டும் என்றே திரையிட்டு மறைப்பதாகக் கூறுதல் பொருந் தாது. அங்ங்னம் மறைத்துக்கூறுவது கட்சிச் சார் புடைய செய்தித்தாளின் வேலை; அதனுல்தான் ஒரே நிகழ்ச்சியினைக் குறித்துப் பல நாளிதழ்கள் பலவாருகத் தலையங்கம் தீட்டுகின்றன! கவிதையில் உணர்ச்சியின் காரணமாக ஒன்று சிறந்து நிற்றலால் மற்றவை சிறப்பிழந்து மறைகின்றன என்று கொள்வதே ஏற்புடைத்து. இங்ங்னம் ஒன்றில் சிலவற்றைக் குறைப்பதால் பொருள் விளக்கம் நன்கு ஏற்படுகின்றது. உடலியலை விளக்கும் வண்ணப்படங்களில் உடல் முழுமையும்தசைகள், நரம்புகள், குருதிக் குழல்கள் முதலியவை அனைத்தையும்-ஒரே படத்தில் எழுதிக் காட்டுவதில்லை.