பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அறிவுக்கு விருத்து வரையும் அறியச்செய்யும் நோக்கத்தோடு திங்கள் வானத்தில் பலரும் காணத் திரிவதாகக் கருதுகின் ருர், இவ்வுணர்ச்சி, மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித்

  • , r * * : f 10 - #. يج مياوي திங்கட் புத்தேள் திகிதரும்

என்று வடிவெடுத்தது. உண்மையில் திங்கள் வானத்தில் திரியவும் இல்லை; உலகத்தார்க்கு இவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்ற நோக்கமும் அது கொள்ள வில்லை. இந்த உண்மை திங்கட்குத் தெரியவும் தெரியாது. இங்ங்ணம் கற்பித்துக் கூறுவதுதான் கருத்து விளக்கக் கற்பனையாகும். ஒரு காட்சியில் காணும் அனைத்தையும் வெளிப்படை யாகக் கூறுவதைவிட அதில் உணர்ந்த பகுதிகளை மட்டிலும் எடுத்துக்காட்டுவது சாலப் பயன்தரும். ஊனக் கண்ணுல் பார்க்கும் பொருள்களின் அழகை மனக் கண்ணுல் காணும்பொழுது பன்மடங்கு அது சிறந்து பொலிவுறும். மனம் அவ்வழகில் ஈடுபடும் பொழுதுதான் நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சி யுண்டாகின்றது. மனத்தில் எழும் கற்பனையாற்றல் பொருள்களில் பொலிந்து நிற்கும் உணர்ச்சி பாவனைகளை மட்டிலும் தேர்ந்தெடுப் பதால் அவை மனத்தில் நிலையாகப் பதிவுபெறுகின்றன. பொதுவாகக் கற்பனை மனத்தின் வளர்ச்சிக்கு உறு துணையாக அமைகின்றது என்பது உளவியலாரின் கிருத்து, மனத்தின் உரம் அதன் கற்பனையாற்றலில் உள்ளது என்றும், அத்தகைய உணர்வைத்தருவது கவிதை என்றும் ஆபர்குரோம்பி என்ற திறய்ைவாளர். 10 புறம்-27