கவிதையும் கற்பனையும் 89 கருதுகின்ருர். எனவே, கற்பனையை நன்கு உணர்ந்து க வி ைத ைய நுகரவேண்டும் எ ன் ரு கி ன் ற து. இவ்விடத்தில் பி. அலெக்சாந்தர் என்ற உளவியலறிஞர் கூறியது நினைவுகூர்தற்பாலது. 'உளம் அல்லது ஆன் மாவின் ஆற்றலே கற்பனை என்பது; காரணம், அது தான் மனச்செயல்களனைத்தையும் ஒருங்கு பிணைப்பது. அது புலன்களின்(Senses) ஆணையினின்று விடுபட்டதால் புலன் காட்சியினின்றும் (perception)வேறுபட்டது. அது நினைவினின்றும் (memory) வேறுபட்டது; காரணம், நினைவு முன்னர் அனுபவித்த ஒன்றை இருத்துதலை மட்டிலும் செய்கின்றதேயன்றி, புதிதாக ஒன்றைப் ெய று வ தி ல் லை. அஃது உள்ளக்கிளர்ச்சியினின்றும் (emotion) வேறுபட்டது; காரணம், கற்பனை ஓர் ஆற்றலே யன்றி ஊக்கி (motive) அன்று. அது புரிந்துகொள்ளு தலினின்றும் வேறுபட்டது; காரணம், கற்பனை தன்வய மாக்குவதில் செயற்படுவதேயன்றிக் கண்டபொருள் களின் தன்மையை நோக்கிக் கோவைப்படுத்துவதன்று. அது மன உறுதியினின்றும் வேறுபட்டது; காரணம் மனவுறுதி (will) கடிவாளம் தாங்கி அத்தேரினை இவர்ந்து செல்லும் தேரோட்டியேயன்றி, கற்பனை போல் அத்தேரில் அமர்ந்து செல்லும் தலைவன் அன்று. இவை ஒவ்வொன்றினின்றும் கற்பனை வேறுபடினும், அவற் றையும் கற்பனை அனைத்துக்கொள்கின்றது. ஏனெனில், கற்பனை செய்வதற்கு முழு மனமும் செயற்பட்டாக வேண்டும். அழகிளுல்தான் உலகம் வளர்கின்றது; அழகானவற்றைப் படைத்தலே கற்பனையின் கடமை யாகும்”. கற்பனை குழந்தைப் பருவத்தில் இயல்பாகவே அமைந்தது. சிறுவயதில் குழந்தை கற்பனை செய்வதைப் போலவே, கவிஞனும் கற்பனை செய்கின்ருன்; மணி மயமான பாக்களைப் படைக்கின்ருன், கற்பனை யூற்று நம்மிடம் என்றும் சுரந்து கொண்டிருந்தால்தான்
பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/98
Appearance