பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

களிலும் இப்படிதானே நடைபெறுகிறது. இதற்கா நீங்கள் வராமல் இருக்கலாமா? சரி நீங்கள்தான் வரவில்லையே, இதற்காக அங்கிருந்துகொண்டு நீங்க என்னதான் செய்தீர்கள்? அதையாவது சொல்லுங்கள்” என்றார் கலெக்டர். என்ன சொல்லுவார் பஞ்சாயத்துத் தலைவர்.

இது நம் நாட்டின் நிலை என்றா சொல்லுவார்?


வார்ப்புரு:Xx—larger

1929ல், அதாவது அறுபத்திஇரண்டு ஆண்டுகளுக்கு முன், நானும் பெரியாரும் திருநெல்வேலியில் ஒரு சொற் பொழிவுக்காகச் சென்றிருந்தோம்.

எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இல்லத்தை நாங்கள் அடைந்ததும், எதிர்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக அச்சடித் திருந்த எதிர்ப்பு நோட்டீசுகள் சிலவற்றைக் கண்டோம். அதில் பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர். நாத்திகர்—பெரியார். அவரை இன்று நெல்லையில் பேசவிடக் கூடாது. என்றிருந்தது.

கூட்டம் மாலை 6 மணிக்கு என்பது எங்களுக்குத் தெரியும். மணி 6½யும் ஆயிற்று. எங்களை அழைத்தவர்களும் அங்கே வரவில்லை. ஆகவே, நான் பெரியாரிடம், நாம் பேசாமல் திரும்பிப் போய்விடுவது நல்லது என்றேன். அவரும் சரி என்று இரயில் நிலையத்திற்குப் போக ஏற்பாடு செய்யும்படி சொன்னார். நான் போய் எட்டணாவுக்குப் பேசி ஒரு குதிரை வண்டியைக் கூட்டிவந்தேன்.

வண்டியில் முதலில் என்னை ஏறச் சொல்லிவிட்டுப் வண்டியில் பின் ஏறி அமர்ந்து பெரியார் வண்டிக்