பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


வீரத்திலும் எனக்கு இணை எவருமில்லை என்ற என் இறுமாப்பை அழித்து ஒழித்த பேரறிஞன் இவனே.” எனப் பாராட்டிப் பொருளுதவியும் அளித்து அனுப்பி வைத்தான்.

அக்கால அரசர்களில் இப்படியும் சிலர் இருந்ததாகத் தெரியவருகிறது.


80. சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு

அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.

வக்கீல் : உமக்கு என்ன வேலை?

சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது.

வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா?

சாட்சி : ஆம். இருக்கிறது.

வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா? நிலமாகவா ? கட்டிடமாகவா ?

சாட்சி : கட்டிடமாக.

விக்கீல் : அதன் மதிப்பு எவ்வளவு

சாட்சி : ஒரு லட்ச ரூபாய் பெறும்.

வக்கீல் : ஊர்க்கடைசியில் கோவில் மதிற்சுவரை ஒட்டிப் போட்டிருக்கும் கூரைத் தாழ்வாரம் தானே உன் வீடு.

சாட்சி : ஆமாம்.

வக்கீல் : அதுவா ஒரு லட்சம் பெறும்?