பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


மக்கள் முயற்சிக்கிறார்களே தவிர சேர்த்துவைத்த பொருளில் சிறிதுகூட அனுபவிக்காமல் மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே சாகிறார்களே என வருந்தினான். சருகு அரிக்க நேரமின்றி தீக்காய நேரமில்லாத் தன்மை தன்நாட்டு மக்களிடம் இருப்பது கண்டு மன்னன் மேலும் வருந்தினான். வருந்தி என்ன செய்ய? மன்னனின் கதையும் இதுதானே?

தன் ஆட்சியில் இருக்கும் நாட்டை செம்மைப்படுத்தி திருத்தி ஆளவேண்டும் என்று எண்ணாமல், மேலும், மேலும் நாடுபிடிக்க பேராசை கொண்டு முயல்வது. அவினாலும் அரிய முடிவதில்லை. இப்படித்தான் பலரும். இதுதான் உலகம்.


95. மறதி!

ஒரு பெரியவர் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லோரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து பயணச்சீட்டு கேட்டார்.

இவர் தன் சட்டைப்பையைப் பார்த்துவிட்டு பணப் பையையும் பார்த்துவிட்டு கைப்பையையும் பெட்டியையும் பார்த்துத் தேடிக் கொண்டே இருந்தார். பயணச்சீட்டை சரிபார்ப்பவர் இவரின் தோற்றத்தைப் பார்த்து, “பெரியவர் பயணச்சீட்டைக் கட்டாயம் வாங்கியிருப்பார். வைத்த இடம் தெரியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றெண்ணி “பெரியவரே, பரவாயில்லை; நீங்கள் துன்பப் படவேண்டாம், அமைதியாக இருங்கள்.” என்று சொல்லிவிட்டு அடுத்தப் பெட்டிக்குப் போய்விட்டார்.