பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146


சிறிதுநேரம் கழித்து பயணச்சீட்டை சரி பார்ப்பவர் அந்தவழியாக வரும்போது, பெரியவர் மறுபடியும் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு, “பெரியவரே, நான் தான் துன்பப்படவேண்டாம் கம்மாயிருங்கள் என்று சொன்னேனே! மறுபடியும் ஏன் அச்சீட்டை தேடிக் கொண்டே யிருக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்குப் பெரியவர்.

நான் எந்த ஊருக்குப் போகிறேன் என்பதை அந்தப் பயணச்சீட்டைப் பார்த்தால்தான் தெரிந்துகொள்ள முடியும் என்று கடுமையாகக் கூறினார்.

மறதி எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய மறதி எவருக்கும் இருத்தல் கூடாது.


96. சர்க்கரை சாப்பிடாதே

ஒருமுறை நபிகள் நாயகம் அவர்கள் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்கள். ஒருகிழவி பையன் ஒருவனை உடனகூட்டிக் கொண்டு வந்து அவர் முன்னே வந்து நின்றாள். என்ன என்றார்கள். “இவன் சர்க்கரையை அதிகமாகச் சாப்பிடுகிறான். சாப்பிட வேண்டாமென்று புத்தி சொல்லுங்கள், நான் சொல்லி இவன் கேட்கவில்லை. அதற்காகத் தங்களிடம் அழைத்து வந்தேன்” என்றாள் “அப்படியா” என்று சற்று எண்ணி இன்னும் மூன்று நாட்கள் கழித்து அழைத்து வாருங்கள் என்றார். போய்விட்டார்கள். மூன்றாம் நாள் நாயகம் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை அறிந்து, பல மைல்களுக்கு அப்பால் மிகவும் துன்பப்பட்டு தன் பையனை