பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

பின், நபி பெருமானார் மவுல்லியை ‘செல்வன் எவ்வளவு கொடுத்தான்?’ என்று கேட்க,

“அங்கே செல்வன், தன் வேலைக்காரன் பத்து பருப்பு சிந்தியதற்குப் பத்து குத்து குத்திக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துப் பயந்து நான் கேட்காமலே திரும்பி வந்துவிட்டேன்"—என்றார்.

“இப்போது போய்க் கேளும்” —என்று நாயகத்தின் கட்டளை பிறந்தது.

மவுல்வி—சிறு நடுக்கத்துடன் அப் பணக்காரனிடம் போனார். அப்போது அங்கே, அவன்,

ஒரு வேலைக்காரனைத் தூணிலே கட்டிவைத்து சவுக்காலே அடித்து—10 சொட்டு இரத்தம் எடுக்க அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அது என்ன என்று பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்க,

‘அவன் எண்ணெய் வாங்கி வரும்போது 10 சொட்டு சிந்திவிட்டான். அதற்கு அவன் உடலிலே ரத்தம் 10 சொட்டு எடுக்கச் சவுக்கால் அடிக்கிறார்கள்'—

இது சொல்லக் கேட்டதும் மவுல்வி நடுங்கி, பணக்காரனிடம் சென்று கேட்காமல் திரும்பினார். நாயகமிடம் வந்தபோது—

‘எவ்வளவு பணம் கொடுத்தார்?’ என்று பெருமானார் கேட்கவே—சவுக்கால் அடித்து ரத்தம் எடுத்த கதையைச் சொல்லி,

இம்மாதிரிப் பேர்வழிகளிடம் சென்று, நல்ல காரியத் துக்கு (பள்ளி வாசல் கட்ட) பணம் கேட்க நாவு கூசுகிறது. அச்சமாக இருக்கிறது—பயந்து வந்து விட்டேன் என்று மவுல்வி சொன்னதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/15&oldid=962628" இலிருந்து மீள்விக்கப்பட்டது