பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152


அடைத்து வைத்திருப்பதைப்போல. மணம் செய்விக்காமல் பக்குமடைந்தப் பருவப் பெண்களை மணம் செய்விக்காமல் வீட்டில் அடைத்து வைத்திருப்பதும் தவறு” என்பது.


100. எப்போது புத்தி வரும்?

நிலக்கிழார் நல்லுச்சாமி பிள்ளை என்றால் கீரனூரில் அனைவருக்கும் தெரியும். அவருக்கு இரு மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லை. அவர் இறந்த பதினாறாம் நாள் சடங்கு முடிந்த அன்று, அவரது விழக்கறிஞர் அவரது இல்லத்திற்கு வந்து, அவருக்குள்ள 24 ஏக்கர் நஞ்சை நிலத்தையும் ஆளுக்கு 12 ஏக்கர் வீதம் எழுதி வைத்திருக்கிறார் என்றும், அவற்றிற் குரிய ஆதரவுகளை இரு மனைவிகளிடமும் பிரித்துக் கொடுத்தார். அவரது பெரிய வீட்டைமட்டும் இளம் மனைவிக்கு எழுதி வைத்து இருக்கிறார் என்று கூறி, அந்த ஆதரவை மட்டும் இளம்மனைவியிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டார் வழக்கறிஞர். அவ்வளவுதான்,

அடுத்த நாள் பெரிய மனைவி காமாட்சியம்மாளைச் சேரிந்தவர்கள் தான்தான் முதல் மனைவி; இந்த வீடு எனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்றும், தனக்குப் பின்தான் இளம்மனைவிக்குப் போய்ச் சேரவேண்டும் என்றும் கூறி வழக்குத் தொடரச் செய்தார்கள். இளம் மனைவி மீனாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள் எதிர் வழக்காடினார்கள். நான்கு ஆண்டுகள் முடிந்தும் வழக்கு முடியவில்லை. காமாட்சியம்மாளுக்கு நான்கு ஏக்கர் நிலமும், மீனாட்சியம்மாளுக்கு மூன்று ஏக்கர் நிலமும்