பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154


வழக்கிற்கு இருவருடைய சட்டைகளும், கால்சிராய்களும் விற்று செலவாகி விட்டன. ஆனால் கைக்குட்டை யாருக்குச் சொந்தம் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று இருந்தது.

காமாட்சியம்மாள், மீனாட்சியம்மாளிடம் கேட்டான், “என்னடி செய்வது” என்று,

மீனாட்சி : அக்கா! உனக்கு 6 ஏக்கர் நிலம் போச்சு; எனக்கு 5 ஏக்கர் நிலம் போச்சு இன்னும் வீடு யாருக்குச் சொந்தம் என்று முடிவாகவில்லை. நாம் மீதம் இருக்கும் நிலத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

காமாட்சி : அதற்கு என்னடி செய்வது?

மீனாட்சி : எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வீட்டின் நடுவில் ஒரு சுவர் எழுப்பி, நீ மேல் பாகத்தில் இரு நான் கீழ்பாகத்தில் இருக்கிறேன். அவரவர் நிலத்தை வைத்து அவரவர் சுகமாக வாழலாம்.

காமாட்சி : உன் யோசனை எனக்குப் பிடிக்கவில்லை; நான் ஒப்ப மாட்டேன்.

மீனாட்சி : அக்கா பிடிவாதம் பிடிக்காதே இன்னும் வழக்காடிக் கொண்டிருந்தால் இருக்கின்ற நிலமும் போய்விடுமே!

காமாட்சி : என் யோசனைப்படி நடப்பதானால் மட்டுமே இதற்கு சம்மதிப்பேன்.

மீனாட்சி : உன் யோசனை என்ன?