பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

'மீண்டும் போய்க் கேளும்’—என்று பெருமானார் உத்தரவிடவே,

மவுல்வி சென்றார். நல்ல வேளையாக, அங்கே கடு நிகழ்ச்சியொன்றும் நடைபெறவில்லை. செல்வந்தனைக் கண்டதும், அன்புடன் வரவேற்று, வந்த காரியம் என்ன?” என வினவினான்.

தான் பள்ளிவாசல் கட்டிக் கொண்டிருப்பதாகவும் அதற்குப் பொருள் வேண்டி வந்திருப்பதாகவும் மவுல்வி கூறினார்.

செல்வர் கேட்டார்—'அந்த ஊரில் பள்ளி வாசல் இல்லையா?’

மவுல்வி — ‘ஆமாம்: இல்லை.’

செல்வர் — ‘என்ன செலவாகும்?’ என்னிடம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?’——

மவுல்வி — செலவு (பள்ளி வாசல் கட்ட) ஒரு லட்ச ரூபாய் ஆகும்.

நம் ஊரைச் சுற்றியுள்ள சிலர் 50,000 ரூ. வசூலிக்க முடிவு செய்துள்ளனர். தாங்கள் ஒரு பெருந் தொகையாக ரூ. 50, 000 கொடுத்தால் நல்லது என்று சொன்னார்.

உடனே அப்பணக்காரர், ஒரு லட்ச ரூபாயும் மவுல்வியிடம் கொண்டு வந்து கொடுத்து,

“உடனே பள்ளிவாசல் கட்டத் தொடங்குங்கள் மற்றவர்களிடம் சென்று பணம் வசூலிக்க—காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க வேண்டாம்—"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/16&oldid=962636" இலிருந்து மீள்விக்கப்பட்டது