பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அதே தூரத்து ஊருக்கு பேருந்து (பஸ்) போகிறது என்றால் 50 காசு கொடுத்து அதில் ஏறிப் பயணம் செய்வது ‘சிக்கனம்’.

அதுவும் கொடுப்பது ஏன் என்று 5 காசுக்கு அவல் கடலை வாங்கித் தின்று கொண்டே நடப்பது ‘கருமித்தனம்

ஐநூறு, ஆயிரம் ரூபா என்று விலையுள்ள பட்டாடை புடவைகளை வாங்கிக் கட்டி வாழ்வது ‘டம்பம்

தூய்மையான எளிய—அழகான ஆடை (புடவை) அணிவது ‘சிக்கனம்’.

அப்படியின்றி, அழுக்குடையும் கிழிசல் துணியும் தையல் தெரியும்படி உடுத்திக் கொண்டே இருப்பது ‘கருமித்தனம்’.

இவ்வாறாக, நமக்கு ஏற்ற முறையில் நம் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டால், நம் வாழ்விலே ஒளியும் மகிழ்ச்சியும் உண்டாகும், —

இதற்கும் இலக்கணம் உண்டு.

அஃது—தேவைக்கு மேல் செலவு செய்வது ‘இடம்பம்

தேவையின் அளவு செலவு செய்வது ‘சிக்கனம்

தேவைக்கும் செலவு செய்யாதது ‘கருமித்தனம்

இதிலிருந்து சிக்கனம் எது?

கருமித்தனம் எது?—என்று நமக்கு நன்றாகப் புரிகின்றது.

நமக்கு மட்டும் புரிந்து...என்ன? நம் இல்லத்தில்

உள்ள ஒவ்வொருவருக்கும் புரியவைத்து—வாழ வைப்பதே நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/18&oldid=962638" இலிருந்து மீள்விக்கப்பட்டது