பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வண்டிக்குள் இருப்பதாகவே நினைப்பதில்லை. தாங்கள் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு, எந்த நிகழ்ச்சிகளையும்—இரகசியங்களையும் பேசி விடுகிறார்கள். ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள பலரது வாழ்க்கை—நடைமுறை—சிக்கல்—அல்லது— துயரம் எல்லாம் எப்படி எப்படி வாழ்கிறார்களோ—அவையெல்லாம் கேட்டுள்ளதனால்—அப்படியே நூலாக எழுதவே—எல்லோருடைய உள்ளத்திலும் நன்கு தைத்தது.

“தங்கள் வாழ்க்கையோடு அது மிகவும் ஒட்டியிருக்கிறது. தெரியாத செய்திகள் பல தெரிய வைக்கப்படுகின்றன. புரியாத செய்திகள் புரிய வைக்கப்படுகின்றன.”

ஆகவே, அவன் எழுதிய முதல் நூல் பல லட்சக்கணக் கான (படிகள் பிரதிகள்) விற்பனை யாயின.

அவன் பெரிய எழுத்தாளன் ஆனான்.

அடுத்த பதிப்புகள் பல லட்சக்கணக்கில் விற்பனை யாகாமல் என்ன செய்யும்?

நல்ல எழுத்தாளனாக, நூலாசிரியனாக விளங்க ஒருவன் படிப்பாளியாக பட்டதாரியாக வேண்டுமென்பதில்லை; அனுபவம் ஒன்றே போதும் எனத் தெரிகிறது.

வார்ப்புரு:Xx—larger

அழுக்கு மூட்டைகளை இறக்கியபின் கழுதைகளை முன்னங்கால்களை மட்டும் கட்டி மேயவிட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/20&oldid=962640" இலிருந்து மீள்விக்கப்பட்டது