பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


பேரனிடமிருந்து—

பத்தாம் நாள் கடிதம் வந்தது. அதைக் கண்டதும், பேரன் என்ன எழுதியிருக்கின்றானோ எப்படித் துயருறுகிறானோ? என்ற கவலையால், உடல் நடுங்கி, கைநடுக்கத் தோடு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.

அதில். இந்த நான்கு ஐந்து வரிகள்தான் இருந்தன :

“பாட்டி, இனிமேல் நீங்கள் இந்த ஐம்பது பவுனும் அனுப்ப வேண்டாம். நான் பணம் கேட்கும் போதெல்லாம் எனக்குச் சிக்கன வாழ்க்கைக்கான விவர விளக்கவியல் எல்லாம் எழுதி அனுப்பிக்கொண்டே இருங்கள் . அது போதும்! ‘சிக்கனமாக வாழ்வது எப்படி?'” எனும் புத்தகத்தின் ஆசிரியர் விக்டோரியா மகாராணி என்று— இதனை, ஒரு புத்தக வியாபாரிக்கு ஆயிரம் பவுனுக்கு விற்றுவிட்டேன்.”

இதைப் பார்த்ததும், உலகத்தையாண்ட மகாராணி யின் உள்ளம் எப்படி இருந்தது? எப்படி இருந்திருக்கும்?

இதனைப் படிக்கிற உங்கள் உள்ளம் எப்படி?

எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிற தன் பேரனுக்குப் பாட்டி எண்ணி எழுதியது?—பேரன்—வருங்காலத் தில் சக்கரவர்த்தியாக விளங்கப்போகிறவன் தன் பாட்டிக்கு தெய்தது? இவ் இரண்டையும் பற்றி—

உங்கள் உள்ளம் என்ன எண்ணுகிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/29&oldid=962649" இலிருந்து மீள்விக்கப்பட்டது