பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

உழைப்புக்குக் கூலியாகாது. எப்படி? எவ்வளவு (புல்), வைக்கோல்) தீனி போடுகிறானோ அந்த அளவுக்கு சாணி கொடுத்து விடும். எந்த அளவு கழுநீர் தருகிறானோ அந்த அளவு சிறுநீர் கொடுத்துவிடும்.

அன்றன்றைக்கு, அது (மாடு) பற்றுவரவு நேர் பண்ணி விடுகிறது.

அதன் உழைப்பெல்லாம் தியாகம். ஆடு கோழிகளைப் போல் அல்லாமல்,

மாடுகளின் தியாகத்தை நினைக்கும்போது, மயிர்க் கூச்செறிகிறது.

காலமெல்லாம் உழைத்து உழைத்து எலும்பும் தோலுமாகி இறந்து, அவனுக்கு உணவாகவும் பயன்படுகிறது உழவன் உரித்த அதன் தோலை மரத்திலே காய வைத்தான் —

அந்த மாட்டின் தோல் ‘சொல்கிறது’.

‘ஐயோ, கவுண்டர் தரையில் நடக்கிறாரே, அவர் காலைக் கல்லும் முள்ளும் குத்துமே—என் தோல் எதற்காக இருக்கிறது—செருப்பாகத் தைத்து போட்டுக் கொண்டு நடக்கலாமே’—என்று சொல்கிறது.

அவ்வளவு தியாகம் மாடுகளுக்கு.

இவையனைத்தும் கதையல்ல.

உண்மை நடைமுறை.

இவைகளைப் பார்க்கும்போது—

மக்களாகிய நாம் என்ன தியாகம் செய்கிறோம்? என்பதை சிந்தித்துப் பார்ப்பது நலமாகும்.

இன்னும் இதை அறிவுறுத்தவே—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/37&oldid=962658" இலிருந்து மீள்விக்கப்பட்டது