பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

வைத்துக் கொடுத்து, இவை இரண்டையும் சேர்த்து உண்ணுகிறவருக்கு விக்கல் எடுத்தால்,

‘அடே நான் இருக்கிறேன்—என்னைக் குடித்துப் பிழைத்துக்கொள்’ என்று, அந்நேரத்தில் அவனுக்கு உதவி, அவன் வயிற்றிலே போய் விழுந்து உணவாகமாறி மடிந்துவிடுகிறது. இந்தக் கருத்து வெளிப்படவே திருவள்ளுவர்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
'துப்பா யதூஉம் மழை,

—என்ற குறளில் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.

பகுத்தறிவு பெற்ற மக்களாகிய நாம், நீரினிடத்தும், விலங்குகளிடத்தும், பறவைகளிடத்தும், உயிரில்லாத (சடப்) பொருள்களிடத்தும் காணப்படும் தியாக வாழ்வை நினைத்தாவது தியாகவாழ்வு வாழ்வது நலமாகும்.

ஏனெனில்,

'“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது”

என்ற வள்ளுவரின் வாக்கு, பிறரை வாழவைத்து வாழ்வது என்பதும், பிறர் வாழ்வுக்குத் தான் துணை புரிந்து வாழ்வது என்பதுமாகும்.



வார்ப்புரு:Xx—larger

தன் ஒரே மகன் திடீரென்று இறந்துவிடவே. துயரம் தாங்காமல் வருந்திய ஒரு தந்தை, புத்த பகவானை அணுகி, எப்படியாவது தன்னுடைய மகனை உயிரோடு எழுப்பிக் கொடுக்கும்படி வேண்டி அழுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/39&oldid=962660" இலிருந்து மீள்விக்கப்பட்டது