பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்னுரை

“அறிவுக் கதைகள் நூறு” இன்று வெளிவருகிறது. சில் படித்தவை. சில பார்த்தவை. சில் கேட்டவை சில கற்பனை.

இவை அனைத்தும் தமிழில், தமிழரின், தமிழகத்தின் சொத்துக்கள். இவை அழிந்து போகும்படி விட்டுவிட முடியாதவை.

சிறியோரும், பெரியோரும் கதைகளை விரும்பி ப்டிக்கும் காலம் இது. ஆகவே, கதைகளைப் படிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டு நல்வழியில் நடக்க இக் கதைகள் துணை புரியும் என நம்புகிறேன். தமிழக மக்கள் படித்துப் பயன் பெறுவது நல்லது.

என் நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு உதவுகிற பாரி நிலையத்தாருக்கும், அச்சிட்டு உதவுகிற மாருதி அச்சகத்தினர்க்கும் என் நன்றியும், வணக்கமும்.

திருச்சிராப்பள்ளி—8
தங்களன்பிற்குரிய
12 — 8—1984
கி. ஆ. பெ. விசுவநாதம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/6&oldid=1254790" இலிருந்து மீள்விக்கப்பட்டது