பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, தமிழர் தோன்றித் தமிழ்தோன்றி தமிழ்இசை தோன்றிய இசைக்கடல் இன்பத்தைச் சுவைக்கும் தமிழ்மக்கள் நடுவிலே—இப்படியும் சிலர் இருந்தனர் என்று தெரிகிறது.


38. சுருட்டும் திருட்டும்!

ஓர் ஊரிலே சுருட்டு வியாபாரிகள் இருவர். அவர்களுக்குள் போட்டி அதிகமாக இருந்தது.

போட்டி போட்டு ஒருவர்க்கொருவர் சுருட்டு விலையைக் குறைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.

தன் போட்டி ஆசாமி அசலுக்கும் குறைவாக விற்பதைக் கண்டு, மற்றவரால் அதைச் சமாளித்துப் போட்டி போட முடியவில்லை. எப்படிக் குறைந்த விலைக்கு விற்கிறார் என்பதும் விளங்கவில்லை.

இரவு கடையைப் பூட்டியதும். இவர் அவர் (போட்டி வியாபாரி) வரும் வழியையே—எதிர்பார்த்துக் கொண்டு நின்றார். அவரும் கடையைச் சாத்திவிட்டு வருகிறார்.

அவரை நோக்கி, “ஐயா, “நான், புகையிலையைத் திருடிக்கொண்டு வந்து விற்கிறேன்; எனக்கே இந்த விலை கட்டுப்படி ஆகலையே? உங்களுக்கு எப்படிக் கட்டுகிறது?” —என்று கேட்டார்.

அதற்கு அவர், “உன்னைப் போல முட்டாள் அல்ல நான்: சுருட்டையே திருடிக் கொண்டுவந்து விற்கிறேன் என்றார்.

எப்படி,

இந்த வணிகம்?

‘சுருட்டும் திருட்டும் அது கலந்த உருட்டும்’ எப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/71&oldid=962695" இலிருந்து மீள்விக்கப்பட்டது