பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76


இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த, வந்திருந்தவர்களிலே ஒரு பெரியவர்,

“என்னப்பா, தாலி கட்டப் போகிற சமயத்திலே இழவு, பேரிழவு, பிணம்—என்று பேசலாமா?’—என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன்—

“போங்கையா—தாலி கட்டியதும் நீங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுங்க. என்பாடல்ல இங்கே தாலி அறுது”—என்று சொன்னான். அதற்கு ஒன்றும் பேசாமலே பெரியவர் எழுந்து போய்விட்டார்.

எதை, எங்கு, யார், எவரிடத்தில்—

எப்படிப் பேசுவது என்பதை இன்னும் பலர் புரிந்து கொள்ளவில்லை.

—என்பதற்கு இது ஒரு சான்று.



42. திதி கொடுத்தல்

குப்புசாமி என்ற சிற்றூர்வாசி தன் தந்தைக்கு திதி கொடுக்க நினைத்தார். ஒரு ஐயரை அணுகினார். அவர் கொடுத்த பாட்டியல்படி சாமான்களை வாங்கி வைத்திருந்தார்.

ஐயர் வந்ததும் திதி கொடுக்கத் தொடங்கினார்.

குப்புசாமி, “இந்தச் சாமான்கள் எல்லாம் எதற்காக?"—என்று ஐயரைக் கேட்டார்.

அவர், “மேல் உலகத்தில் உள்ள உன் தந்தைக்கு மந்திரங்களை ஜெபித்து—ஜெபித்து அவருக்கு இவையெல்லாம் அனுப்பி வைக்கப்பெறும்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/78&oldid=962702" இலிருந்து மீள்விக்கப்பட்டது