பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77


குப்புசாமிக்குப் பெரிய மகிழ்ச்சி! தந்தை இறந்த பிறகும், அவர் உண்ண உணவு கொடுக்கின்றோமே என்ற மகிழ்ச்சி!

சடங்குகள் தொடங்கின.

ஐயர் சாமான்களைப் பார்வையிட்ட போது அங்கிருந்தது ‘புழுங்கல் அரிசி,’ ‘இது வேண்டாம் பச்சரிசி கொண்டு வா’—என்று சொன்னார்.

உடனே குப்புசாமி—

“சாமி! எங்கப்பாவுக்கு பச்சரிசி ஆகாது. அதைச் சாப்பிட்டதனால்தான் வயிற்றுவலி வந்து இறந்தார்.

“மேலுலகத்துக்கும் இதை அனுப்பி அவரைத் துன்புறுத்த வேண்டமே” என்று வினயத்துடன் வேண்டிக் கொண்டான்.

ஐயருக்கு, அப்ப—என்ன சொல்வது, என்ன செய்வது என்று விளங்கவே இல்லை.

உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா?


43. நரியும் திராட்சையும்

கடும்பசியால் திராட்சைப்பழத் தோட்டத்திலே நரி நுழைந்தது. பழங்களை உண்ணவேனும் என்ற ஆசை. எட்டி எட்டிப் பார்த்தது. முடியாமல் நெடுநேரத்துக்குப் பின், ‘சீசீ! இந்தப் பழம் புளிக்கும்; இது வேண்டாம்’ என்று சொல்லிப் போய்விட்டது நரி.

இந்தக் கதையை என் பேத்தியிடம் சொன்னேன்.

பேத்தி, “தாத்தா அது உங்க காலத்து நரி, இந்தக் காலத்து நரி என்றால், ‘ஸ்டுல்’—பலகை எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/79&oldid=962703" இலிருந்து மீள்விக்கப்பட்டது