பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கொண்டுபோய்ப் போட்டு, அதன்மேல் ஏறி, எல்லாத் திராட்சைப் பழங்களையும் நன்றாகத் தின்று விட்டு போய்விடும்—”

என்று சொல்லவே.

நான்—"இது இக் காலத்து நரிக்கதை போலும்” என்றேன்.


44. செட்டியாரும் காகமும்

செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம்.

மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது.

நரி—"காக்கா காக்கா—உன் குரல் எவ்வளவு அழகாக—இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது.

காகம் அதை நம்பி,

வாய்திறந்து—கா கா என்றது.

உடனே மூக்கிலிருந்த வடை விழவே—அதை நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. காகம் ஏமாந்தது—

இது கேட்ட என் பேத்தி—

“தாத்தா—உங்க காலத்து காக்கா கதை அது. இந்தக் காலத்து காகம்—

நரி பாடச் சொன்னபோது, வடையை காலில் வைத்துக்கொண்டு காகா—என்று பாடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/80&oldid=962704" இலிருந்து மீள்விக்கப்பட்டது