பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

நரி ‘உன் பாட்டு நன்றாக இருக்கிறது. ஒரு ஆட்டம் (டான்சு) ஆடு’—என்றது. உடனே காகம்.

வடையை மூக்கில் வைத்துக்கொண்டு (டான்சு) ஆட்டம் ஆடியது.

அதுகண்ட நரி, மறுபடியும், ‘'ஏ. காக்கா—உன் பாட்டும் ஆட்டமும் நன்றாக இருக்குது. ஆனால் கொஞ்சம் பாடிக் கொண்டே ஆடு'’ என்று கேட்டது. அதற்குக் காகம், சற்று நிதானித்து, வடையை முழுதும் தின்றபின்பு, காகா என்று கத்திப் பாடியும்,

தாதை என்று ஆடிக் காட்டியும், பறந்து ஓடிப் போய்விட்டது. .

—என்று பேத்தி கூறவே, நான் இது நவீன காலத்துக் காக்கைக் கதை போலும்—என்றேன்.

இது பழங்காலக் காக்கை, நரியை மட்டும் பொறுத்த தல்ல.

இக்காலத்துக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியினையும் நமக்குக் காட்டுகிற கதையாகும்.


45. தன்னம்பிக்கை

வன விலங்குகளிலே புலி சிறுத்தை முதலியன வாழும் குகைகள் மிகவும் நாற்றமடிக்கும். அழுகல் இறைச்சியும் தோலும் முடியும் சிதறிக் கிடக்கும்.

ஆனால், சிங்கம் வாழும் குகையோ தூய்மையாக இருக்கும். அதற்குக் காரணம், நாளைக்கு வேண்டுமென்று இன்றைக்கே உயிர்களைக் கொன்று குகையில் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/81&oldid=962705" இலிருந்து மீள்விக்கப்பட்டது